தேவையானவை:
பச்சரிசி - 4 கப்,
கெட்டியான புளிக்கரைசல் - 1½ கப்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - ¼ கப்,
துருவிய வெல்லம் - 1 டேபிள்ஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க:
வரமிளகாய் - 6,
வெந்தயம் 1 டீஸ்பூன்,
எள் - 1 டேபிள் ஸ்பூன்,
தனியா - 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்.
தாளிக்க:
நல்லெண்ணெய், சமையல் எண்ணெய் - தலா 4 டேபிள்ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 10 இதழ்கள், உடைத்த முந்திரி துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
வெறும் வாணலியில் அரிசி, கடலைப்பருப்பு இரண்டையும் வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து கொரகொரப்பாகப் பொடிக்கவும். குக்கரில் எண்ணெய் (8 ஸ்பூன்) விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து 1½ கப் புளிக்கரைசல், 7 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், வெல்லத்தூள் சேர்த்து வறுத்து வைத்துள்ள அரிசி, பருப்பு சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலந்து ஒரு விசில் வந்ததும் இறக்கி நன்றாக கலந்து பரிமாறவும்.