Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சுக்காங்கீரை மசியல்

தேவையானவை:

துவரம் பருப்பு - 150 கிராம்,

வெந்தயம் - ½ ஸ்பூன்,

சுக்காங்கீரை - 1 கட்டு,

நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்,

தக்காளி - 1,

பச்சைமிளகாய் - 3,

மஞ்சள் பொடி - ½ ஸ்பூன்.

தாளிக்க:

வெந்தயம் - ¼ ஸ்பூன்,

கடுகு - 1 ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 2,

பெருங்காயம் - ½ ஸ்பூன்,

உப்பு - திட்டமாக,

எண்ணெய் - 2 ஸ்பூன்.

செய்முறை:

பருப்பையும், வெந்தயத்தையும் 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கீரையை பருப்பு, வெந்தயத்தோடு சேர்த்து 1½ டம்ளர் தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து 4 விசில் விட்டு வேகவிடவும். பருப்போடு சேர்ந்து கீரை நன்கு குழைந்ததும், மத்தால் கடையவும். திட்டமாக உப்பு சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். குழம்பு பதத்தில் வந்ததும் இறக்கி, தாளிக்கவும். தாளிப்பில் சிறிது பூண்டு, வெங்காயம் விரும்பினால் சேர்க்கலாம்.