Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடுகு அரைத்துவிட்ட கறி

தேவையானவை:

தோல் விதை நீக்கி சிறியதாக நறுக்கிய பரங்கிக்காய் - ½ கிலோ, உப்பு - தேவையான அளவு,

மஞ்சள் பொடி,

வெல்லம் - சிறிது.

அரைத்துவிட:

தேங்காய் - ஒரு சிறிய மூடி,

கடுகு - ½ டீஸ்பூன்,

சிவப்பு மிளகாய் - 2.

தாளிக்க:

நெய் - 2 டீஸ்பூன்,

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ½ டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை:

வாணலியில் நெய் சூடாக்கி தாளிக்கும் பொருட்கள் தாளித்து, நறுக்கிய பரங்கிக்காய், உப்பு, மஞ்சள் பொடி, சிறிது நீர் தெளித்து ¾ பங்கு வெந்தவுடன், அரைக்கும் பொருட்களை நன்கு மசிய அரைத்து காய் கலவையை சேர்த்து நன்கு கிளறி, வெல்லம் சேர்த்து புரட்டி சற்றே தளர இருக்கையில் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். இது ஒரு சைட் டிஷ். அருமையாக இருப்பதுடன் வயிறு நிரம்பிவிடும்.