தேவையான பொருட்கள்
1/2 கிலோ சிக்கன்
3வெங்காயம்
2தக்காளி
2வர மிளகாய்
2பச்சை மிளகாய்
4கொத்து கருவேப்பிலை
தேவையானஅளவுகொத்தமல்லி
1 மேஜை கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
1 மேஜை கரண்டி தனியா தூள்
1/ 2 மேஜை கரண்டி மஞ்சள் தூள்
1 மேஜை கரண்டி மிளகுத்தூள்
1மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுதுகள்
1எலுமிச்சை பழம்
2 மேஜை கரண்டி சோம்பு
1மேஜை கரண்டி சீரகம்
2பிரிஞ்சி இலை
1இஞ்ச் பட்டை
2 கிராம்பு
செய்முறை:
முதலில் கறியை நன்கு சுத்தம் செய்து பின் அதில் மஞ்சள்தூள் தடவி எடுத்து வைத்துக் கொள்ளவும், பின் அதனுடன் உப்பு, சிவப்பு மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகு தூள், மஞ்சள் தூள் ஒரு எலுமிச்சைச் சாறு பிழிந்து. நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் தட்டு போட்டு மூடி ஊற வைத்து கொள்ள வேண்டும். பின் மிக்ஸி ஜாரில் சோம்பு, சீரகம். 2 வெங்காயம், 2 தக்காளி, ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணை காய்ந்ததும் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சோம்பு சேர்த்து வதக்கி கொள்ளவும், அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் கலவையை அதனுடன் சேர்த்து வதக்கிக்கொள்ளவும் பின் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.பின் அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், பின் அதனுடன் ஊற வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விடவும்.தண்ணீர் ஊற்றாமல் எண்ணெயிலே சிக்கனை நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும், நன்கு வதக்கி விட்டு பின் ஒரு தட்டு போட்டு 10 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.சுவையான மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா தயார்