தேவையான பொருட்கள்
1கைப்பிடி புதினா
1கைப்பிடி புதினா
1கைப்பிடி கொத்தமல்லி
1பச்சை மிளகாய்
2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
1டேபிள்ஸ்பூன் நெய்
1பிரியாணி இலை
1 பட்டை
2 லவங்கம்
1 ஏலக்காய்
1 தலா அன்னாச்சி மொட்டு, மராத்தி மொட்டு
2 வெங்காயம்
1 தக்காளி
1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1டீஸ்பூன் மிளகாய் தூள்
1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
உப்பு
செய்முறை:
முதலில் தேவையானவற்றை எடுத்து கொள்ளவும். அரிசியை 2தடவை கழுவி, 15நிமிடம் ஊறவைக்கவும். புதினா, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும். அரிசியை ஊற வைக்கவும். ஒரு குக்கரில், 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, பிரியாணி இலை, பட்டை, லவங்கம், அன்னாச்சி மொட்டு, மராத்தி மொட்டு சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பின் அரைத்த புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தண்ணீர் ஊற்றவும். அதாவது தண்ணீர்- 1டம்ளர் அரிசிக்கு, 1 1/2டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதித்தவுடன், குதிரைவாலி அரிசியை சேர்த்து கலந்து, உப்பு பதம் பார்த்து, சிறிது நெய் சேர்த்து, 3 முதல் 4 விசில் வரும் வரை மூடி போடவும். விசில் அடங்கியவுடன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.