Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உளுந்து வெந்தயக் களி

தேவையானவை:

உளுத்தம் பருப்பு - 100 கிராம்,

வெந்தயம் - 50 கிராம்,

நெய் (அ) நல்லெண்ணெய் - 50 கிராம்,

வெல்லம் - 200 கிராம்,

ஏலக்காய் - 4.

செய்முறை:

உளுத்தம் பருப்பு, வெந்தயம் இரண்டையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். மிக்சியில் சூடு ஆறியவுடன் ஏலக்காய் சேர்த்து நைஸ் ரவையாக உடைக்கவும். 1 டம்ளர் தண்ணீர் விட்டு ெகாதித்ததும் இந்த ரவையை கொட்டி நன்கு கிளறி மூடிவிடவும். பின்பு வெல்லத்தை கொதிக்கவிட்டு வடிகட்டி கிளறி மூடிய கலவையில் விட்டு அடுப்பில் வைத்து நெய் (அ) எண்ணெய் கிளறி இறக்கினால் சுவையான உளுந்து வெந்தயக் களி ரெடி.