தேவையானவை:
தூதுவளைக்கீரை - 1/2 கப்,
இட்லி அரிசி - 1 கப்,
உளுந்து - 1/4 கப்,
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 3 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். பின்பு அவற்றை நன்கு கழுவி வடிகட்டி இஞ்சி, மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மாவு கலவையில் உப்பு சேர்த்து வழக்கம் போல் புளிக்க வைக்க வேண்டும். மாவு புளித்த பிறகு அதில் தோசை வார்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.