தேவையான பொருட்கள் 2 கப் காய்க்கறிகள் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழக்கு, சோயா, பட்டாணி, மீல்மேக்கர்) 1நறுக்கிய வெங்காயம் 1நறுக்கிய தக்காளி 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1/2டீஸ்பூன் மஞ்சாள் தூள் உப்பு 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் கொத்தமல்லி,கறிவேப்பிலை அரைக்க: 1/2 கப் தேங்காய் துருவல் 2-3 பச்சை மிளகாய் 1டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை 1டீஸ்பூன் சீரகம் 1டீஸ்பூன்...
தேவையான பொருட்கள்
2 கப் காய்க்கறிகள் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழக்கு, சோயா, பட்டாணி, மீல்மேக்கர்)
1நறுக்கிய வெங்காயம்
1நறுக்கிய தக்காளி
1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2டீஸ்பூன் மஞ்சாள் தூள்
உப்பு
2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
கொத்தமல்லி,கறிவேப்பிலை
அரைக்க:
1/2 கப் தேங்காய் துருவல்
2-3 பச்சை மிளகாய்
1டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை
1டீஸ்பூன் சீரகம்
1டீஸ்பூன் சோம்பு
1டீஸ்பூன் வெள்ள எள்ளு
1 கசாகசா
1 பட்டை
1 வலங்கம்
1 ஏலக்காய்
செய்முறை:
ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பின் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும்... பிறகு காய்கறிகளை சேர்த்து மிதமான தீயில் 5நிமிடம் வதக்கவும்.மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.அரைத்து வைத்த விழுதை காய்கறிகள் சேர்த்து 2 கப் தண்ணீர் உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும்... இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்