தேவையானவை: காம்பு நீக்கிய வல்லாரை இலை - 1 கப், காய்ந்த மிளகாய் - 3, மிளகு - 1 ஸ்பூன், சீரகம் - 1 ஸ்பூன், எண்ணெய் - 2 ஸ்பூன், புளி - கொட்டைபாக்களவு, உப்பு - தேவைக்கு, சின்ன வெங்காயம் - 10, தேங்காய் துருவல் - 4 ஸ்பூன், பெருங்காய...
தேவையானவை:
காம்பு நீக்கிய வல்லாரை இலை - 1 கப்,
காய்ந்த மிளகாய் - 3,
மிளகு - 1 ஸ்பூன்,
சீரகம் - 1 ஸ்பூன்,
எண்ணெய் - 2 ஸ்பூன்,
புளி - கொட்டைபாக்களவு,
உப்பு - தேவைக்கு,
சின்ன வெங்காயம் - 10,
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்,
பெருங்காய ெபாடி - ½ டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயம் போட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு சின்ன வெங்காயம், கீரையைத் தனித்தனியாக வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் உப்பு, புளி, மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி துவையலைப் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். வல்லாரை மூளைக்கு பலம் கொடுக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும்.