தேவையானவை:
பச்சரிசி - 1 கப்,
வெல்லம் - ½ கப்,
நெய் - 5 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் - சிறிதளவு,
நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகள் - 5 டீஸ்பூன்.
செய்முறை:
பச்சரிசியை ஒரு மணி ேநரம் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு, வெல்லத்தை பாகு ஆக்கி ஊற்றி நைசாக அரைத்து எடுக்கவும். அதில் தேங்காய் துண்டுகள், சிறிது உப்பு, ஏலத்தூள் கலந்து பணியாரக் கல்லில் நெய் ஊற்றி சூடானதும் அரைத்த மாவை ஒரு கரண்டியாக குழியில் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

