Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உடுப்பி ரசம்

தேவையான பொருட்கள்

5 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணை

2 ½ கப் தனியா

¾ கப் பெருஞ்சீரகம்

¼ கப் வெந்தயம்

15கார சிகப்பு மிளகாய்

10 கறிவேப்பிலை

1 தேக்கரண்டி பெருங்காயம்

ரசம் செய்ய:

¼ கப் துவரம்பருப்பு

1 மேஜைகரண்டி தேங்காய் எண்ணை

கடுகு

¼ கப் கறிவேப்பிலை

சிட்டிகை பெருங்காயம்

½ தேக்கரண்டி மஞ்சள் பொடி

1 கப் தக்காளி துண்டுகள்

½ தேக்கரண்டி புளி பேஸ்ட் (paste)

1/4 கப் வெல்லம் பொடித்தது

2 ½ மேஜை கரண்டி ரச பொடி

¼ கப் கொத்தமல்லி

தேவையானஉப்பு

பிரிவு ரசம்

செய்முறை:

ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.தேவையான பொருட்களை அருகில் வைக்க. ரசப் பொடி செய்ய: மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சிறிது சூடான பின் தனியா வறுக்க. பொன் நிறமானதும், ஒரு கிண்ணத்தி மேல் ஒரு ஜல்லடையில் வடிக்க. வறுத்த தனியாவை பேப்பர் டவல் மேல் போடுக. குறைந்த நெருப்பிண் மேல் அதே வாணலியில் அதே எண்ணையில், பெருஞ்சீரகம் வறுக்க. சீரகம் பொறிந்த பின் முன் போலவே எண்ணையை வடிக்க. வறுத்த சீரகத்தை பேப்பர் டவல் மேல் போடுக. குறைந்த நெருப்பின் மேல் அதே வாணலியில் அதே எண்ணையில், வெந்தயம் வறுக்க. முன் போலவே எண்ணையை வடித்து, பேப்பர் டவல் மேல் போடுக.குறைந்த நெருப்பின் மேல் அதே வாணலியில் அதே எண்ணையில், சூடான எண்ணையில் மிளகாய் வறுக்க; காந்த வைக்காதீர்கள். இப்பொழுது அதே வாணலியில் எண்ணை சேர்க்காமல் கறி வேப்பிலை வறுக்க பச்சை வாசனை போக. பெருங்காயம் சேர்க்க. வீடு முழுவதும் வாசனை நிரம்பும்.வறுத்தபொருட்களை மிக்ஸியில் கொர கொரவென்று அறைக்க. பொடி தயார். தட்டில் போட்டு ஆற வைக்க. ஒரு air tight container இல் போட்டு சேமிது வைக்க. தேவையான பொழுது தேவையான அளவு எடுத்து சாம்பார், ரசம் செய்யலாம் ரசம் செய்ய குக்கர் பாத்திரத்தில் 4 கப் நீர் சேர்த்து பருப்பைக் குக்கரில் வேக வைக்க.மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு தாளிக்க, பச்சை மிளகாய் மஞ்சள் பொடி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க. தக்காளி சேர்த்து வதக்க. 1 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. புளி பேஸ்ட் 2 கப் நீரில் கரைத்து சேர்க்க. நன்றாக 4-5 நிமிடங்கள் கொதிக்கட்டும்.¼ கப் வெல்லம் சேர்க்க. பச்சை வாசனை போகட்டும்.வேக வைத்த பருப்பு, வேக வைத்த மேல் நீரையும் சேர்க்க. `10 நிமிடம் இதை ஹை flame வ்லேமில் கொதிக்க வைக்க; கொதி வந்ததும். 2 ½ மேஜைகரண்டி ரச பொடி 1கப் சூடு நீரில் நன்றாக கலக்கி ரசத்துடன் சேர்த்து கலக்க. நன்றாக 4-5 நிமிடங்கள் கொதிக்கட்டும் உப்பு சேர்த்து கலக்கி பெருங்காயம் சேர்க்க; 2 கொதி வரட்டும், அடுப்பை அணைக்க.கொத்தமல்லி சேர்க்க. வீடு முழவதும் கம கம வென்று மணக்கும். ரஸம் தயார். ருசித்துப் பார்க்க. பரிமாறுக. ரசம் குடிக்கலாம். சோறு கூட கலந்து சாப்பிடலாம்.