தேவையான பொருட்கள்
6பெரிய தக்காளி
4மீடியம் சைஸ் வெங்காயம்
1/4 கப்ப.பருப்பு
1 டேபிள் ஸ்பூன்க.பருப்பு
1 டீ ஸ்பூன்ம.தூள்
1 ஸ்பூன்தனி மிளகாய் தூள்
ருசிக்குஉப்பு
தாளிக்க:-
1 டீ ஸ்பூன்கடுகு
1/2 ஸ்பூன்உ.பருப்பு
1/2 ஸ்பூன்சீரகம்
6சீவின பெரிய பூண்டு
2ப.மிளகாய்
2சி.மிளகாய்
1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
1 ஆர்க்குகறிவேப்பிலை
1 டேபிள் ஸ்பூன்நறுக்கின கொத்தமல்லி தழை
2 ஸ்பூன்தே.எண்ணெய்
தண்ணீர் பருப்பு வேக வைக்க
1 ஆர்க்குகறிவேப்பிலை
1 டேபிள் ஸ்பூன்நறுக்கின கொத்தமல்லி தழை
அலங்கரிக்க:- வட்டமாக நறுக்கின தக்காளி துண்டுகள், கொத்தமல்லி தழை
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக, நறுக்கவும்.தக்காளி, பூண்டை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.ப.மிளகாயை கீறிக் கொள்ளவும். ப.பருப்பையும், க.பருப்பையும், பௌலில் எடுத்து நன்கு சுத்தம் செய்து,பிறகு ம.தூள், உப்பு சேர்க்கவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரில் பருப்பை போட்டு குழையாமல் 3/4 பங்கு வேக வைத்து எடுக்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில், 1 ஸ்பூன், தே.எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம், ம.தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.வதங்கியதும், தக்காளி, மி.தூள் சேர்க்கவும்.தக்காளி வதங்கியதும், வெந்த பருப்பை போடவும். பருப்பு சேர்த்து, ஒன்று சேர நன்கு கொதித்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு, பௌலுக்கு மாற்றவும் அடுப்பை சிறு தீயில் வைத்து,1 ஸ்பூன் தே.எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ,ப.மிளகாய், சி.மிளகாய் போட்டு தாளிக்கவும்.தாளித்ததும், பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், போட்டு அடுப்பை நிறுத்தி விடவும். பின் கூட்டில் போட்டதும், கொத்தமல்லி தழையை சேர்த்து கிளறவும்.இப்போது, சுவையான, டமேட்டோ கூட்டு தயார்.