Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தக்காளி ஜாம்

தேவையானவை:

நன்கு பழுத்த தக்காளி - ½ கிலோ,

சர்க்கரை - 1 கப்,

ஏலப்பொடி - 1 டீஸ்பூன்,

அல்வா பவுடர் - ¼ டீஸ்பூன்,

நெய் - 3 டேபிள் ஸ்பூன்,

உடைத்த முந்திரித்துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

ஒரு அடிகனமான பாத்திரத்தில் தக்காளியை பொடியாக அரிந்து போட்டு அதிலேயே 1 கப் சர்க்கரை, அல்வா பவுடரை சேர்த்து நன்று கிளறவும். தக்காளி வெந்து பச்சடி பதம் வந்ததும் ஏலப்பொடி தூவி நெய்யில் முந்திரி வறுத்துச் சேர்த்து இறக்கவும். பிரட்டிற்கு இது பெஸ்ட் சைடிஷ்.