தேவையான பொருட்கள் 1கப்நறுக்கின முருங்கைக்காய் எலுமிச்சை அளவுபுளி 1 டீ ஸ்பூன்வறுக்க:- வெந்தயம் 1டீ ஸ்பூன்து.பருப்பு 1 டீ ஸ்பூன்க.பருப்பு 1டீ ஸ்பூன்உ.பருப்பு 1 டீ ஸ்பூன்ப.பருப்பு 1 டீ ஸ்பூன்பச்சரிசி 1 டீ ஸ்பூன்மிளகு 2 டீ ஸ்பூன்தனியா 6சி.மிளகாய் 1/2 டீ ஸ்பூன்ம.தூள் தேவைக்குகல் உப்பு 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள் 2...
தேவையான பொருட்கள்
1கப்நறுக்கின முருங்கைக்காய்
எலுமிச்சை அளவுபுளி
1 டீ ஸ்பூன்வறுக்க:- வெந்தயம்
1டீ ஸ்பூன்து.பருப்பு
1 டீ ஸ்பூன்க.பருப்பு
1டீ ஸ்பூன்உ.பருப்பு
1 டீ ஸ்பூன்ப.பருப்பு
1 டீ ஸ்பூன்பச்சரிசி
1 டீ ஸ்பூன்மிளகு
2 டீ ஸ்பூன்தனியா
6சி.மிளகாய்
1/2 டீ ஸ்பூன்ம.தூள்
தேவைக்குகல் உப்பு
1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
2 ஸ்பூன்ந.எண்ணெய்
1 ஆர்க்குகறிவேப்பிலை
தேவையான அளவுதண்ணீர்
குறிப்பு:- முருங்கைக்காயை வேகவிடும்போது,2 ப.மிளகாயை சேர்க்கவும்
செய்முறை
முருங்கைக்காயை சுத்தம் செய்து சற்று பெரியதாக நறுக்கவும். புளியை ஊற வைக்கவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து, வெறும் கடாயில் தனியா,அரிசி,க.பருப்பு, து.பருப்பு, உ.பருப்பு, ப.பருப்பு, மிளகாய், மிளகு, வெந்தயம், அனைத்தையும் சிவக்க வறுத்து, தட்டில் ஆற விடவும்.ஊற வைத்த புளியை கரைத்து வடிகட்டி பௌலில் எடுக்கவும்.அடுப்பை மீடியத்தில் வைத்து கடாயில், முருங்கைக்காய், ம.தூள்,கீறின ப.மிளகாய், உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும்.காய் வெந்ததும், புளி தண்ணீரை விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.சிறிய மிக்ஸி ஜாரில், வறுத்ததை போட்டு நன்கு அரைக்கவும்.புளி வாசனை போனதும், அரைத்ததை போட்டு கட்டியில்லாமல் கலந்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை நிறுத்தி விடவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து, சிறிய கடாயில், 2 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். தாளித்ததை, குழம்பில் சேர்த்து பௌலுக்கு மாற்றவும்.இப்போது, பாரம்பர்ய தஞ்சாவூர் குழம்பு தயார்.