Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவில் கதம்ப சாதம்

தேவையான பொருட்கள்

பொன்னி பச்சரிசி - 200 கிராம்

பாசிப்பருப்பு - 150 கிராம்

கத்தரிக்காய் - 2

வாழைக்காய் - பாதி

மாங்காய் துண்டு - 4

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - பாதி

கொத்தவரங்காய் - ஒரு கைப்பிடி

பரங்கி, பூசணி தலா- ஒரு சிறிய துண்டு, அவரை - 6

புளி - நெல்லிக்காய் அளவு

மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நெய் - 4 ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்

மிளகு, ஓமம் தலா - 1/2 டீஸ்பூன்

கொண்டைக்கடலை, காராமணி, நிலக்கடலை, மொச்சை தலா - 10 கிராம்பூன் (ஊற வைத்து அவித்து வைத்துக் கொள்ளவும்.)

மல்லி இலை - ஒரு கொத்து

கடுகு, உளுந்து, முந்திரி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - தாளிக்க.

வறுத்தரைக்க

துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - 1 துண்டு

தனியா - இரண்டு ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 8

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

எள் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை

முதலில் காய்கறிகள் அனைத்தையும் நன்கு கழுவி துண்டுகளாக்கி அரிசி கழுவிய நீரில் வேகவைக்கவும்.வேக நேரமெடுக்கும் காய்களை முதலிலும் சீக்கிரம் வேகக் கூடிய காய்களை பிறகும் மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். பிறகு வேகவைத்த கடலை வகைகளை சேர்க்கவும். பிறகு புளியை கரைத்து அதில் ஊற்றி நன்கு வெந்ததும் வறுத்தரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியாக வெறும் சட்டியில் வறுத்து ஆறவைத்து ஒன்றாகப் பொடித்து குழம்பில் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து குழம்பு நன்றாக கூடி வரும்போது இறக்கவும்.இப்பொழுது பச்சரிசி பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவிவிட்டு நான்கு மடங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து சிறிது மஞ்சள் பொடி சிறிது உப்பு பெருங்காயம் சேர்த்து 4 விசில் விட்டு குழைய வேகவைக்கவும்.பிறகு குக்கரில் உள்ள சாதத்துடன் இந்தக் குழம்பை எடுத்து சேர்த்து கிளறவும். ஒரு கடாயில் 3 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், முந்திரி, கறிவேப்பிலை தாளித்து அத்துடன் ஓமம் மிளகு இவற்றை இடித்துப் போட்டு. தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்றாக வதக்கி பாதி தாளிப்பு சாதத்துடன் சேர்த்து கிளறவும்.இப்பொழுது சாதத்தை சர்விங் பவுலில் மாற்றி மீதமுள்ள தாளிப்பு மேலே போட்டு மல்லி இலை தூவி ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி பரிமாறவும். இப்பொழுது சுவையான சூப்பரான சத்தான கோயில் கதம்ப சாதம் ரெடி. வடகம் அப்பளம் சிப்ஸ் உடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.