தேவையான பொருட்கள்
4 கப்- வேகவைத்த சாதம்
1 பெரிய எலுமிச்சை அளவுபுளி
2 டீஸ்பூன்-வர கொத்தமல்லி
1 டீஸ்பூன்- மிளகு
1 1/4 டீஸ்பூன்- வெந்தயம்
3 டீஸ்பூன்-கடலைப்பருப்பு
2 டீஸ்பூன்-உளுந்து பருப்பு
சிறிதுகறிவேப்பிலை
4 டீஸ்பூன்- நல்லெண்ணெய்
1 டீஸ்பூன்- கடுகு உளுத்தம்பருப்பு
தேவையானஅளவு உப்பு
1/2 டீஸ்பூன்- பெருங்காயத்தூள்
2 டீஸ்பூன்-கருப்பு எள்ளு
1/2 டீஸ்பூன்- மஞ்சள்தூள்
5-வரமிளகாய்
2 டீஸ்பூன்-நிலக்கடலை
செய்முறை:
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.அரிசியில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் கொத்தமல்லி மிளகு வெந்தயம் மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்னர் அதே கடாயில் 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் உளுந்து பருப்பு சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு 2 டீஸ்பூன் கருப்பு எள் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.அனைத்து வறுத்த கலவையை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.இப்போது புளியோதரை பொடி தயார். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு உளுந்து பருப்பு கடலைப் பருப்பு சேர்த்து பொரியவிடவும் பின்பு 2 வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பெருங்காய 2 டீஸ்பூன் நிலக்கடலை பருப்பு சேர்த்து வறுத்த பின்பு கரைத்து வைத்துள்ள புளியை கரைத்து சேர்க்கவும் தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த் நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.இப்போது கொதித்தவுடன் 2 டீஸ்பூன் புளியோதரைப் பொடி சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை திக்கான பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும் வடித்த சாதத்துடன் சேர்த்து கலந்து கொள்ளவும். உப்பு சரி பார்த்து தேவை எனில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இப்போது சுவையான கோவில் புளியோதரை தயார்.