தேவையானவை: மைதா மாவு - 2 கப், சர்க்கரை பவுடர் - 2 கப், பட்டர் - ½ கப், முட்டை - 3, பால் - ¼ கப், பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன். செய்முறை: மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா...
தேவையானவை:
மைதா மாவு - 2 கப்,
சர்க்கரை பவுடர் - 2 கப்,
பட்டர் - ½ கப்,
முட்டை - 3,
பால் - ¼ கப்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்.
செய்முறை:
மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து சலிக்கவும். வெண்ணெயை பீட்டரில் சேர்த்து கிரீம் போல் பீட் செய்யவும். பின் முட்டை சேர்த்து பீட் செய்து சிறிது சிறிதாக சர்க்கரை பவுடர், வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து பீட் செய்யவும். அதன் பின் சலித்த மாவு, பால் என சிறிது சிறிதாக மாற்றி மாற்றி ஊற்றி கட் அண்ட் போல்ட் முறையில் கலக்கி, கலந்து வைத்த கலவையை மோல்டில் சேர்த்து, பின் மைக்ரோ அவனில் 180 டிகிரியில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்து எடுத்தால் மிருதுவான, சுவையான வெனிலா ஸ்பாஞ்ச் கேக் தயார். சூடு ஆறியவுடன் கட் செய்து வைக்கவும்.