தேவையானவை:
துருவிய தேங்காய் - 200 கிராம்,
பன்னீர் - 100 மிலி,
கிரீம் - 300 மிலி,
சர்க்கரை - 200 கிராம்,
நெய் - 3 மேசைக்கரண்டி,
காய்ந்த ரோஜா இதழ் - 5 மேசைக்கரண்டி,
ஏலப்பொடி - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் சர்க்கரை மற்றும் பன்னீரை சேர்த்து கொதிக்க வைக்கவும். சர்க்கரை கரைந்து வரும் போது அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அதில் கிரீமை சேர்க்கவும், மீடியம் தீயில் 20 நிமிடம் கெட்டியாகும் வரை கிளறவும். இதனுடன் இரண்டு மேசைக்கரண்டி ரோஜா இதழ் மற்றும் ஏலப்பொடியை சேர்க்கவும். நன்கு சுருண்டு வரும் போது நெய் சேர்த்து பத்து நிமிடம் நன்கு கிளறவும். நெய் பிரிந்து வரும் போது நெய் தடவிய ட்ரேயில் தேங்காய் கலவையை சேர்த்து நன்கு பரப்பிவிட்டு அதன் மேல் மீதமுள்ள ரோஜா இதழ்களை தூவி அலங்கரித்து துண்டுகள் போட்டு வைக்கவும். நன்கு ஆறியதும் பரிமாறவும்.