தேவையான பொருட்கள்
1 கப் பச்சரிசி மாவு
3/4 கப் வெல்லம்
1/4 கப் தண்ணீர்
சிறிதுஏலத்தூள்
சிறிதுசுக்குத் தூள்
1/4 கப் மைதா
4 டேபிள்ஸ்பூன் ரவை
சிட்டிகைஉப்பு
எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை
வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு கம்பி பாகு எடுக்கவும்.பின் இறக்கி அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும் ஏலத்தூள் சுக்குத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இது இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.பின் இதை மூன்று நாட்கள் வரை அப்படியே ஊறவிடவும் மூன்று நாட்கள் கழித்து ரவை மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அதிரச மாவு பதத்தில் இருக்க வேண்டும்.வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கைகளில் சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி கொண்டு மாவை நன்கு பிசைந்து எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக கிள்ளி போடவும்.இரண்டு புறமும் திருப்பி விட்டு நன்றாக வேகவைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சாஃப்ட் ஆக இருக்கும் அரிசி மாவை புளிக்க வைக்க மிகவும் நன்றாக இருக்கும் எண்ணெயில் போடும் போது பிரிந்தால் இன்னும் சிறிது மைதா அல்லது ரவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.