தேவையான பொருட்கள் 2 கப்ஸ்வீட் கார்ன் (உரித்ததது) 1மீடியம் சைஸ் வெங்காயம் 1மீடியம் சைஸ் தக்காளி 2மீடியம் சைஸ் கேரட் 1 டேபிள் ஸ்பூன்பட்டர் 1 ஸ்பூன்மிளகு, சீரகம் பொடித்தது ருசிக்குஉப்பு 2 ஸ்பூன்நறுக்கின கொத்தமல்லி தழை தேவையான அளவுதண்ணீர் அலங்கரிக்க:- மிளகு, சீரக தூள், பட்டர், கொத்தமல்லி தழை செய்முறை: ஸ்வீட் கார்னை...
தேவையான பொருட்கள்
2 கப்ஸ்வீட் கார்ன் (உரித்ததது)
1மீடியம் சைஸ் வெங்காயம்
1மீடியம் சைஸ் தக்காளி
2மீடியம் சைஸ் கேரட்
1 டேபிள் ஸ்பூன்பட்டர்
1 ஸ்பூன்மிளகு, சீரகம் பொடித்தது
ருசிக்குஉப்பு
2 ஸ்பூன்நறுக்கின கொத்தமல்லி தழை
தேவையான அளவுதண்ணீர்
அலங்கரிக்க:-
மிளகு, சீரக தூள், பட்டர், கொத்தமல்லி தழை
செய்முறை:
ஸ்வீட் கார்னை உரித்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கேரட்டை சற்று பொடியாக நறுக்கவும். கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பெரிய மிக்ஸி ஜாரில் 1/4 பங்கு ஸ்வீட் கார்னை நன்கு அரைத்துக் கொள்ளவும்.மிளகு, சீரகத்தை சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரில், நறுக்கின, வெங்காயம், கேரட்டை தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, 2 விசில் விட்டு வேக வைத்து ஆற விட்டு, காய்கறிகளை வடிகட்டி தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், 2 ஸ்பூன், வெண்ணெய் உருகியதும், மீதமுள்ள கார்ன், தக்காளி, உப்பு,சேர்த்து வதக்கவும்.வதங்கியதும், அரைத்த கார்ன் விழுதை சேர்த்து 2நிமிடம் வேக விடவும்.ஆற வைத்த காய்கறியை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.அரைத்ததை சேர்த்து, வடிகட்டிய தண்ணீரை விட்டு, கொதிக்க விடவும். கொதித்ததும், பொடித்த மிளகு, சீரக பொடியை போடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு, மேலே, கொத்தமல்லி தழை, மீதமுள்ள பட்டரை போடவும். பிறகு கண்ணாடி பௌலுக்கு மாற்றவும். மேலே,மிளகு, சீரக தூள், போடவும். இப்போது, சுவையான, சுலபமான ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப் தயார்.