தேவையானவை:
வேகவிட்டு மசித்த பரங்கிக்காய் - 1 கப்,
சிலுப்பிய தயிர் - ஒரு கப்,
உப்பு - ேதவைக்கேற்ப.
அரைக்க:
பச்சை மிளகாய் - 1,
சீரகம் ¼ டீஸ்பூன்,
தேங்காய் - ½ மூடி.
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு - தலா ¼ டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 ஆர்க்கு.
செய்முறை:
அரைக்கும் பொருட்களை மைய அரைத்து சிலுப்பிய தயிரில் உப்பு மற்றும் மசித்த பரங்கிக்காய் சேர்த்து நன்கு கலந்து தாளிக்கும் பொருட்களை சூடான தேங்காய் எண்ணெயில் தாளித்து துருவிய தேங்காய் 2 டீஸ்பூன் சேர்த்து பரிமாற இன்னும் சுவை கூட்டும்.


