தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு சுளைகள் - 10
வாழைப்பழம் - 1
அன்னாசிப்பழம் - 1
ப்ரெஷ் க்ரீம் - தேவையான அளவு
மாதுளை முத்துகள் - சிறிதளவு.
செய்முறை:
ஆரஞ்சு சுளைகளை நார், விதை நீக்கிவிட்டு, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கவும். வாழைப்பழம், அன்னாசிப்பழத்தையும் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கவும். பின்னர், நறுக்கிய பழங்களை ஒரு பாத்திரத்தில் மாற்றிவிட்டு அதனுடன் ப்ரெஷ் க்ரீம் கலந்து சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்திருந்து பின்னர் எடுத்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.


