தேவையான பொருட்கள்
முட்டை - 6
சர்க்கரை வள்ளி கிழங்கு - 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் - 5
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - ஒரு கொத்து
முந்திரி - 10
தக்காளி - 3
பட்டை - 1
தேங்காய் பால் - 1 கப்
இலவங்கம் - 5
பிரியாணி இலை - 2
ஏலக்காய் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 குழி கரண்டி
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அடுப்பில் வாணலி வைத்து காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, தனியா ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். ஆறியதும் நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் சர்க்கரை வள்ளி கிழங்கு தோல் சீவி சுத்தம் செய்து துருவி சேர்த்து, பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். தோசை கல்லில் ஊற்றி இரண்டு புறமும் வெந்ததும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மீண்டும் அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, இரண்டாக கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை கொர கொரவென்று அரைத்து சேர்த்து வதக்கவும். வதங்கும் நேரத்தில் மிக்ஸியில் தக்காளி, புதினா முந்திரி, கொத்தமல்லி கீரை ஆகியவற்றை சேர்த்து தேங்காய் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போல் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட்டை ஊற்றவும். பிறகு வறுத்து அரைத்த தையும் அப்படியே சேர்க்கவும். நன்கு வதங்கியதும் மீதம் இருக்கும் தேங்காய்ப் பால், காஷ்மீர் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மட்டன் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். மசாலா வாசனை போனதும் நறுக்கி வைத்த முட்டை துண்டுகளை சேர்த்து அனலை குறைத்து ஐந்து நிமிடம் கிளறவும். கொத்தமல்லி கீரை தூவி அடுப்பை அணைக்கவும் சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு முட்டை குருமா தயார்.