Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முளைக்கட்டிய வெந்தய அரிசி நொய் கஞ்சி

தேவையானவை:

முளைக்கட்டிய வெந்தயம் - 50 கிராம்,

புழுங்கல் அரிசி நொய் - 100 கிராம்,

பூண்டு - 10 பல்,

இஞ்சி துருவல் - ½ ஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2,

வெங்காயம் - 50 கிராம்,

உப்பு - சுவைக்கு,

தண்ணீர் - ½ லிட்டர்,

தயிர் - 1 டம்ளர்.

செய்முறை:

குக்கரில் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் முளைக்கட்டிய வெந்தயம், புழுங்கல் அரிசி நொய் சேர்த்து, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு பின்பு அதில் கடைந்த தயிரில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு குடித்தால் மிகவும் சுவையாகவும், சத்து மிகுந்ததாகவும் இருக்கும்.