தேவையானவை:
முளைக்கட்டிய வெந்தயம் - 50 கிராம்,
உருளைக்கிழங்கு - ¼ கிலோ,
வெங்காயம் - 100 கிராம்,
மிளகாய் தூள் - 1½ ஸ்பூன்,
கரம் மசாலா தூள் - ½ ஸ்பூன்,
சீரகம் - ½ - ஸ்பூன்,
ஓட்ஸ் தூள் - 50 கிராம்,
புதினா (அ) கொத்தமல்லி - ½ கப்,
உப்பு - சுவைக்கு,
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்,
எண்ணெய் - 50 மிலி.
செய்முறை:
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து அரிந்த வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, அதில் முளைக்கட்டிய வெந்தயத்தை சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், அரிந்த கொத்தமல்லி (அ) புதினா சேர்த்து இறக்கவும். வேகவைத்து உரித்த உருளைக்கிழங்கு, ஓட்ஸ் தூள் சேர்த்து நன்கு பிசையவும். அதனை விருப்பப்பட்ட வடிவத்தில் தட்டி தோசைக்கல்லில் இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு பிரட்டி எடுக்கவும். சுவையான கட்லெட் தயார். (தேவையானால் விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.)