தேவையானவை:
முளைக்கீரை - 3 கப்,
சீரகம் - 1 ஸ்பூன்,
பூண்டு - 4 பல்,
காய்ந்த மிளகாய் - 2,
உப்பு - திட்டமாக,
பெருங்காயம் - ¼ ஸ்பூன்,
தேங்காய் - 1 பத்தை,
பச்சரிசி - 1 ஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 ஸ்பூன்.
செய்முறை:
வேரைக் கிள்ளிவிட்டு ஸ்ட்ரா மாதிரி உள்ள தண்டுடன் கீரையை நறுக்கி, சீரகம், பூண்டு தட்டிப் போட்டு குழைய வேகவிடவும். உப்பு சேர்த்து, தேங்காய், பச்சரிசி சேர்த்தரைத்து, கீரையோடு சேர்த்து 1 கொதி விட்டு கெட்டியானதும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய் தாளித்து போடவும்.