தேவையானவை
கொழுந்து அகத்திக்கீரை - 3 கிண்ணம்
பெரிய வெங்காயம் - 2
பூண்டு பல் - 6
சீரகத்தூள் - அரைதேக்கரண்டி
அரிசி கழனிநீர் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 3 தேக்கரண்டி
அரிசி - 2 தேக்கரண்டி (வறுத்துக் கொள்ளவும்)
முந்திரிப் பருப்பு உடைத்தது - 2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, சீரகம் - தலா அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2.
செய்முறை:
அகத்திக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு அலசிக் கொள்ளவும். அரைக்கச் சொன்னதை அரைத்து வைக்கவும். பூண்டு, வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும். பின்னர், குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். அத்துடன் கீரை சேர்த்து வதக்கவும். பின்னர், அரிசி கழனி நீர் சேர்க்கவும். பின்னர், சீரகத்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். குக்கரில் 1 அல்லது 2 விசில் வைத்து இறக்கி, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கெட்டித்தன்மைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். அகத்திக்கீரைச் சாறு ரெடி.