தேவையானவை:
வேர்க்கடலை தோலுடன் - 1 கப்,
பொட்டுக்கடலை - ¼ கப்,
உளுத்தம் பருப்பு - 8 டேபிள் ஸ்பூன்,
வரமிளகாய் - 4, உப்பு தேவைக்கு,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
புளி - அரை நெல்லிக்காய் அளவு,
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 10 இதழ்கள்.
செய்முறை:
வெறும் வாணலியில் வேர்க்கடலை சிவக்க வறுத்து தோலை நீக்கவும். அதே வாணலியில் உளுத்தம் பருப்பு, பொட்டுக்கடலை, வரமிளகாய் இவற்றை சிவக்க வறுக்கவும். புளியை மட்டும் தனியே வறுக்கவும்.வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு தட்டில் போட்டு உப்பு, பெருங்காயம் இவற்றையும் அதனுடன் கலக்கவும். வெறும் வாணலியில் கடுகு, கறிவேப்பிலைத் தாளித்து அதனையும் இவற்றோடு சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலந்து விட்டு ஆறியதும் ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு வைக்கவும். தேவையான அளவு காரச்சட்னி ப்ரிமிக்ஸ் எடுத்து தண்ணீர் மட்டும் சேர்த்து கலந்தால் சட்னி தயார்.

