தேவையான பொருட்கள்
ஸ்டாக் பொடி
4 தேக்கரண்டி எண்ணை
4மேஜைகரண்டி தனியா
2 தேக்கரண்டி சீரகம்
2 தேக்கரண்டி எள்
4 ஸ்டார் அனிஸ்
1 தேக்கரண்டி கஸகஸா
4 ஏலக்காய்
1 அங்குலம் இலவங்கப்பட்டை
20 கிராம்பு
4 மேஜைகரண்டி கொப்பரை தேங்காய்
1 தேக்கரண்டி மிளகு
மசாலா பாத்:
1 மேஜைகரண்டி நெய்
1 தேக்கரண்டிகடுகு
½ தேக்கரண்டி சீரகம்
1பிரின்சி இலை
சிட்டிகை பெருங்காயம்
½கப் வெங்காயம் பொடியாக நறுக்கியது
2 பச்சை மிளகாய், நீளமாக வெட்டியது
1 தேக்கரண்டி இஞ்சி, துருவியது
1 தேக்கரண்டி பூண்டு, துருவியது
¼ கப் தக்காளி பொடியாக நறுக்கியது
15 முழு முந்திரி
1 கப் பட்டாணி+கேரட் (frozen)
1உருளை, நீராவியில் வேகவைத்து, தோலுரித்து துண்டாக்கியது
½ தேக்கரண்டி மஞ்சள் பொடி
½ தேக்கரண்டிமிளகாய் பொடி
1 கப் பாஸ்மதி அரிசி
2½ கப் நீர்
தேவையானஉப்பு
2 மேஜைகரண்டி ஃபிரெஷ் தேங்காய் துருவல்
2 மேஜைகரண்டி கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
செய்முறை:
ஸ்டாக் பொடி;எப்பொழுதும் ஸ்டாக் பொடி செய்து காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைப்பேன், குறைந்த நெருப்பின் மேல் கேஸ்ட் இரும்பு ஸ்கில்லேட்டீல் நெய் எண்ணை சூடு செய்து தேவையான பொருட்களை வாசனை வரும் வரை வறுக்க. பின் ஒரு தட்டில் ஆற வைக்க. பின் மிக்ஸியில் கொர கொரவென்று பொடிசெய்க. 2 மேஜைகரண்டி பொடி சாதத்தில் சேர்க்கலாம்.ஒரு கிண்ணத்தில் அரிசி கூட 2 கப் நீர் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்க, களைந்து பின் வடிக்க. அரிசி ஊறிக்கொண்டிருக்கும் பொது மீதி வேலைகளை கவனிக்க மைக்ரோவெவில் பட்டாணி+கேரட் 4 நிமிடம் வேகவைக்கமிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் (நான் கேஸ்ட் இரும்பு ஸ்கில்லேட் தான் உபயோகப்படுத்துவேன்) 1 மேஜை கரண்டி நெய் சூடான பின் கடுகு சேர்க்க; பொறிந்த பின் சீரகம், வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க. வெங்காயம் சேர்த்து பிரவுன் ஆகும் வரை வதக்க 3 நிமிடங்கள். பச்சை வாசனை போகும் வரை வதக்க.மசாலா பவுடர் சேர்க்க 2 ½ நீர் சேர்த்து கொதிக்க வைக்க. காஷ்மீரி சில்லி பவுடர், அரிசி, உப்பு சேர்த்து கிளற. நெருப்பை குறைத்து மூடி 15 நிமிடம் வேகவைக்க. வேண்டுமானால் சிறிது நீர் சேர்க்க. அரிசி 90% வெந்த பின் காய்கறிகள் சேர்த்து கிளற. மூடி வேகவைக்க.சாதம் உதிரி உதிரி யாக இருக்க வேண்டும். அடுப்பை அணைக்க.பறிமாறும் போலிர்க்கு சாதத்தை மாற்றுக. முந்திரி திரி ரோஸ்ட் செய்க கொத்தமல்லி, முந்திரி மேலே சேர்த்து அலங்கரிக்க. ஃபிரெஷ் தேங்காய் துருவல் போடுக.