தேவையான பொருட்கள்
4 மேஜைகரண்டி வெண்ணை
20ஆர்கானிக் டோவூ துண்டுகள் (organic tofu cubes)
1 மேஜைகரண்டி கார்ன் ஸ்டார்ச்
1 தேக்கரண்டி பெப்ரிக்கா பவுடர் (paprikka)
½ தேக்கரண்டி மிளகு பொடி
1பிரின்சி இலை
3 கிராம்பு
3 ஏலக்காய்
1 அங்குலம் இலவங்கப்பட்டை
1 தேக்கரண்டி சீரகம்
¼தேக்கரண்டி பெருங்காயம்
¼ கப் கறிவேப்பிலை
¼ கப் வெங்காயம், நறுக்கியது
1 அங்குலம் இஞ்சி, பொடியாக நறுக்கியது
1 தேக்கரண்டி பூண்டு, பொடியாக நறுக்கியது
½ தேக்கரண்டி மஞ்சள் பொடி
2 கப் தக்காளி தூண்டுகள்
2 கப் பட்டாணி கேரட் மிக்ஸ். வ்ரோஜென்
1 தேக்கரண்டி கரம் மசாலா பொடி
¼ கப் தேங்காய் பால்
1/4 கப் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
1 தேக்கரண்டி கஸ்தூரி மேத்தி
தேவையானஉப்பு
கரம் மசாலா பொடி ஸ்டாக் செய்ய:
1 கப் தேங்காய் துருவல்
½ கப் சோம்பு
6 ஸ்டார் அனிஸ்
5ஜாவித்ரி
3 வர மிளகாய்
¼கப் கிராம்பு
¼கப் ஏலக்காய்
¼கப் இலவங்கப்பட்டை
செய்முறை:
நலம் தரும் ரெசிபியை நலம் தரும் பொருட்களுடன், நலம் தரும் முறையில் உருவாக்குதுதான் முதல் ஸ்டெப். எவ்வாறு செய்தேன் என்பதை பார்க்க. ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள். கரம் மசாலா பொடி ஸ்டாக் செய்ய; எல்லா பொருட்களும் டிரை ரோஸ்ட் செய்ய வேண்டும்.மிதமான தீயின் மேல் ஒரு கனமான பாத்திரத்தில் முதலில் தேங்காய் துருவல் பொன் சிகாப்பாக வறுத்து ஒரு தட்டில் போடுக. மிதமான தீயின் மேல் ஒரு கனமான பாத்திரத்தில்மீதி பொருட்களை ஒன்றாக சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க. வறுத்த பொருட்களை மிக்ஸியில் பொடிசெய்க. மசாலா பொடியை காற்று புகாத ஜாரில் 1 மாதம் வரை சேமித்து வைக்கலாம்.நான் எப்பொழுதும் organic extra firm tofu வாங்குவேன். சுத்தமான துணியால் ஒத்தி எடுத்தால் இன்னும் firm ஆகும். சின்ன துண்டுகளாக்கி ஒரு கிண்ணத்தில் போடுங்கள். கார்ன் ஸ்டார்ச், பெப்ரிக்கா, மிளகு பொடி சேர்த்து குலுக்குங்கள். தூண்டுகள் கோட் ஆகும். 10 நிமிடம் மேரிநெட் செய்க. பின் மிதமான நெருப்பின் மேல் ஒரு அடிகனமான ஸ்கீலெட்டில் வெண்ணை உருகிய பின் துண்டுகளை வறுக்க, 2 நிமிடங்கள். கருக வைக்காதீர்கள். நிறம் மாறினதும் வெளியே எடுத்து வைக்க. (முழுக்க வெண்ணை சேர்க்க விரும்பாவிட்டால் பாதி வெண்ணை, பாதி தேங்காய் எண்ணை சேர்க்க.) அதே பாத்திரத்தில் கடுகு பெருங்காயம் தாளிக்க. பிரிஞ்சி இலை,வெங்காயம் சேர்த்து வதக்க. வெங்காயம் பிரவுன் ஆன பின் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க. தக்காளி சேர்த்து கிளற. எல்லாம் வதங்கிய பின் பட்டாணி கேரட் மிக்ஸ் சேர்த்து கிளற. மூடி கொதிக்க வைக்க. நெருப்பை குறைக்க. மசாலா பொடி சேர்க்க. தேங்காய் பால் சேர்க்க. குறைந்த நெருப்பிலேய தொடருங்கள். வேண்டிய அளவு நீர் சேர்க்க. வறுத்து வைத்திருந்த டோவூ துண்டுகளையும், சேர்த்து கிளற. எல்லா வாசனைகளும் பொருட்களும் ஒன்றாக கலந்த பின் –(3-4 நிமிடங்கள்) அடுப்பை அணைக்க. உப்பு சேர்க்க. கஸ்தூரி மேத்தி, கொத்தமல்லி மேலே தூவுக. சுவையான ருசியான மசாலா. கூட நான் சாதம், பரோட்டா, அல்லது சப்பாத்தி கூட பரிமாறுக. டிப்ஸ்; extra firm tofu கிடைக்காவிட்டால் டோவூ பிளாக்கை 2 தடடூகள் நடுவே வைத்து மேலே கனமான போல் 5 நிமிடம் வைத்தால் தண்ணீர் எல்லாம் வடிந்து விடும். ஸ்ட்ரைன் செய்க துணியால் ஒத்தினால் இன்னும் வ்ர்ம் ஆகும். Hypothyroid இருந்தால் டோவூ உபயோகிக்காதீர்கள். அமெரிக்காவின் பாபுலர் chef Emerill Lagassi வெண்ணையுடன் தோல் சேர்த்தாலும் ருசியாக இருக்கும் என்று கேலியாக சொல்லுவார். வெண்ணை சேர்க்க தயங்காதீர்கள். மசாலா உங்கள் சமையல் அறையிலேயே ஃபிரெஷ் ஆக தயாரியுங்கள். மிதத்திர்க்கும் ஒரு படி குறைந்த நெருப்பில் சமை