தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1/2 கப்
தக்காளி - 3
எலுமிச்சைப் பழச்சாறு - 1/2 டீஸ்பூன்
மல்லித் தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 தேக்கரண்டி
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதல் நாள் இரவே கொள்ளை ஊறவைத்து , மறுநாள் மூன்று கப் தண்ணீரை ஊற்றி குக்கரில் வேகவைத்து, தண்ணீரை வடித்துவிடவும். மிளகு, சீரகத்தை மையாக அரைத்து, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தட்டிப் போடவும். நெய்யை காயவைத்து தக்காளி, உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, அரைத்த விழுது சேர்த்து இன்னும் மூன்று நிமிடங்கள் வதக்கவும். கொள்ளு வேக வைத்த தண்ணீரையும், தேவையான உப்பையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி, வடிகட்டி எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து மல்லித்தழையை சேர்த்து பரிமாறவும்.


