தேவையான பொருட்கள்:
தினை - 1/4 கப்
கம்பு - 1/4 கப்
உருளைக்கிழங்கு - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிதளவு
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மேல் மாவு தயாரிக்க:
மைதா - 1 கப்
ரவை - 1/2 கப்
நெய் - 1/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
பாத்திரத்தில் மைதாவை போட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். சிறு உருண்டைகளாக்கி பூரிபோல் இட்டு தோசைக்கல்லில் லேசாகச் சுட்டெடுத்து இரண்டு அரைவட்டமாக கத்தரித்து வைக்கவும். தினை, கம்பு வறுத்து ரவையைப்போல் உடைத்து அத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சிறிது மசாலா பவுடர், கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கவும். அரை வட்டமாக உள்ள பூரியின் நடுவே தினை மசாலாவை வைத்த மூன்று பக்கமும் தண்ணீர்தொட்டு ஓட்டி, முக்கோண வடிவம் செய்து வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு காயவைத்து, மிதமான தீயில் இரண்டிரண்டாக பொரித் தெடுக்கவும். தக்காளி சாஸூடன் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.