தேவையான பொருட்கள்
இறால் - 1/2 கிலோ
பட்டை - 1
லவங்கம் - 5
ஏலக்காய் - 3
பிரியாணி இலை - 1
வெங்காயம் - 2
முந்திரி - 10
பாதாம் - 10
புளிக்காத தயிர் - 1 கப்
கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி கீரை - ஒரு பிடி
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 10 பல்.
செய்முறை
வாணலியில் வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி அதில் இலவங்கம், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி, பாதாம், ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கி தண்ணீர் ஊற்றி மூடி வைத்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் மீதமிருக்கும் வெண்ணெயை சேர்த்து அரைத்து வைத்த மசாலாவை ஊற்றவும் அதில் தயிர், கிரீம் சேர்த்து கிளறவும். கசூரி மேத்தியை கசக்கி சேர்க்கவும். கரம் மசாலா, மிளகுத்தூள், உப்பு, தனியாத் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி சுத்தம் செய்து வைத்த இறாலை சேர்த்து அனலை குறைத்து மூடி வைத்து பத்து நிமிடம் வேக வைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி கீரை தூவி பரிமாறவும். சுவையான இறால் வெண்ணெய் மசாலா தயார்.