தேவையானவை:
உப்புமா ரவை-1 கப்,
துருவிய உருளைக்கிழங்கு-2,
பூண்டு, பச்சைமிளகாய், இஞ்சி விழுது-தலா 1 டீஸ்பூன்,
உப்பு-ேதவையான அளவு,
வெள்ளை எள்- 2 டீஸ்பூன்,
மிளகுப் பொடி-½ டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி-சிறிதளவு,
பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
இரண்டு கப் நீர் கொதிக்க விட்டு அதில் பூண்டு, மிளகாய், இஞ்சி பேஸ்ட், உப்பு, மிளகுப்பொடி, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, எள், ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். இப்போது ரவை, துருவிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும். நன்கு ஆறிய பின் நீர் தொட்டு நன்கு பிசைந்து சிறிய எலுமிச்சை அளவு உருட்டி, கையால் சிறிது தட்டைகளாக தட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் சிவக்கப் பொரித்து லவங்கம் பொடித்து போட்ட டீயுடன் பரிமாறவும்.