தேவையானவை:
கடலை மாவு - 3 கப்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
அரிசி மாவு - 1 கப்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
வரமிளகாய் - 6.
செய்முறை:
வரமிளகாயை ஊறவைத்து நைஸாக கெட்டியாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, வெண்ணெய், அரைத்த மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் கலந்து நீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். ஒரு கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை சீவல் அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். ருசியான சீவல் ரெடி.