தேவையானவை:
பச்சரிசி - 1 கப் (சிவக்க வறுத்து மிக்ஸியில் ரவையாக்கவும்), பச்சை மொச்சை - 1 கைப்பிடி,
தேங்காய் துருவல் - 1 மூடி.
தாளிக்க:
சமையல் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயம் - 1 துண்டு,
நீர் - 2½ கப்.
செய்முறை:
மொச்சை பருப்பை உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, 2½ கப் நீர் ஊற்றவும். தண்ணீர் நன்கு கொதித்து வரும் போது, உப்பு, தேங்காய் துருவல், வேகவைத்த மொச்சை, வறுத்து உடைத்த அரிசி ரவையை கொட்டி கிளறி, அடுப்பை சிறியதாக வைத்து வேகவிடவும். அடிக்கடி கிளறி விடவும்.