தேவையானவை
சால்மன் மீன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 3
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய்த் துண்டுகள் - கால் கப்
கடுகு, சீரகம், வெந்தயம் - தலா அரை தேக்கரண்டி.
செய்முறை:
சால்மன் மீனை ஆய்ந்து சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர், தக்காளி சேர்த்து நன்கு வெந்து குழைந்து வரும்வரை வதக்கவும். பின்னர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர் சேர்க்கவும். குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.