தேவையான பொருட்கள்
ஒரு கப் சாதம்
ஒரு கப் சீனி
3 ஸ்பூன் நெய்
ஒரு ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
5 முந்திரி
தேவையான அளவு உப்பு
செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும். அதில் 6 முந்திரியை சிறு துண்டுகளாக சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.முந்திரியை ஒரு தட்டில் எடுத்து வைத்து அதே கடாயில் இன்று மதியம் வடித்த மிஞ்சிய சாதத்தை எடுத்து அந்த நெய்யோடு கிளறவும். ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.அந்த கிளறிய நெய் சாதத்தை ஒரு மிக்ஸி ஜாரில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மசிய அரைத்துக் கொள்ளவும். அந்த கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து அரைத்த சாதத்தை ஊற்றவும். பின் ஒரு கப் சீனி சேர்த்து கை விடாமல் கிளறவும். ஒரு ஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு பின்ச் அளவு கேசரி பவுடரை தண்ணீர் சேர்த்து கிளறவும்.அதோடு வறுத்தெடுத்த முந்திரியை சேர்த்து கிளறி மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும். அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் பரிமாறவும். ருசியான ரைஸ் அல்வா ரெடி.