தேவையான பொருட்கள்
100 கிராம் கேழ்வரகு மாவு
தண்ணீர் தேவையான அளவு
50 கிராம் பாசி பருப்பு
ஒரு அச்சு வெல்லம்
ஒரு கப் தேங்காய் துருவல்
எள்ளு சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருள்களை எடுத்து கொள்ளவும். பின்னர் வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி கொள்ளவும்.
பாசி பருப்பை வெறும் கடாயில் வறுத்து அதில் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் கேழ்வரகு மாவில் வெல்ல பாகு வேகவைத்த பாசிப்பருப்பு சேர்க்கவும்.பிறகு தேங்காய் துருவல் எள்ளு சேர்க்கவும். சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.படத்தில் காட்டியவாறு நமக்கு பிடித்தமான வடிவங்களில் பிடித்து வைக்கவும். கொழுக்கட்டை வேக வைக்க இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் கொழுக்கட்டை அதில் வைக்கவும்.படத்தில் உள்ளவாறு எடுத்துவைத்து மூடி வைக்கவும் 10 நிமிடத்தில் வெந்து விடும்.சுவையான சத்தான கேழ்வரகு பிடி கொழுக்கட்டை தயார்.