தேவையானவை :
ராகி மாவு - 2 கப்,
அரிசி மாவு - 1/2 கப்,
தேங்காய் துருவல் - சிறிதளவு,
காய்கறி கலவை - 1 கப்,
மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து அரிசி, ராகி மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் கொதிக்க வைத்து சிறிது உப்பு, மாவு சேர்த்து கிளறவும். பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பீட்ரூட், காய் கலவை வேக வைத்து உப்பு, மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி வைக்கவும். மாவினை வட்டமாக தட்டி, காய் கலவை வைத்து வாழை இலையில் வைக்கவும். அடுத்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். இட்லி தட்டில் கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், வாழை இலை ராகி கொழுக்கட்டை ரெடி. கம்பு, கோதுமை மாவினையும் பயன்படுத்தலாம்.