தேவையானவை:
ராகி மாவு - 1 கப்,
தேங்காய் துருவல் - ½ கப்,
வெல்லம் - ¼ கப்,
ஏலப்பொடி - ½ டீஸ்பூன்.
செய்முறை:
ராகி மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து தாம்பாளம் அல்லது பாத்திரத்தில் போட்டு நல்ல கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மரக்கரண்டியால் கிளறவும். மாவு சப்பாத்தி மாவு பக்குவத்தில் இருக்க வேண்டும். தேங்காய், வெல்லம், சிறிது தண்ணீர், ஏலப்பொடி சேர்த்து பூரணம் தயாரிக்கவும். மாவு ஆறிய பின் பூரிக்கட்டையில் வைத்து சிறு சிறு உருண்டையாக்கி உள்ளங்கை அகலம் வந்ததும், அதில் பூரணம் வைத்து மூடி மோதக வடிவிலோ அல்லது சோமாஸ் வடிவிலோ செய்து ஆவியில் 10 நிமிடம் வேகவிடவும்.