தேவையான பொருட்கள்: வாழைப்பழம் - 2 யோகர்ட் - 1/2 கப் ஊற வைத்த வேர்க்கடலை - 1/2 கப் வெனிலா சிரப் - 1/4 டீஸ்பூன் தேன் - 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப் பால் - 1 குழி கரண்டி பேரீச்சம் பழம் -...
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 2
யோகர்ட் - 1/2 கப்
ஊற வைத்த வேர்க்கடலை - 1/2 கப்
வெனிலா சிரப் - 1/4 டீஸ்பூன்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப் பால் - 1 குழி கரண்டி
பேரீச்சம் பழம் - 4
காய்ந்த திராட்சை - 10.
செய்முறை:
முதல் நாள் இரவு வேர்க்கடலையை ஊற வைக்கவும். மிக்ஸியில் வேர்க்கடலை, யோகர்ட், வாழைப்பழம், பேரீச்சம் பழம், வெனிலா சிரப், வெண்ணெய், தேங்காய்ப் பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும். ஒரு டம்ளரில் ஊற்றி தேன் சேர்த்து நன்கு கலக்கவும். காய்ந்த திராட்சை சேர்த்து பரிமாறவும். சுவையான புரோட்டீன் ஸ்மூதி தயார்.