தேவையான பொருட்கள்
வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி:
1மேஜைகரண்டி நல்லெண்ணை
1தேக்கரண்டி கடலை பருப்பு
1தேக்கரண்டி தோலுரித்த முழு உளுந்து
½ தேக்கரண்டி மிளகு
½ தேக்கரண்டி வெந்தயம்
2 தேக்கரண்டி சீரகம்
6 தேக்கரண்டி தனியா
4கார சிகப்பு மிளகாய்
2தேக்கரண்டி அரிசி
½ தேக்கரண்டி பெருங்காயம்
½ கப் கறிவேப்பிலை
தேவையான அளவு உப்பு
2 மேஜை கரண்டி நல்லெண்ணை
1தேக்கரண்டி கடுகு
1தேக்கரண்டி மெந்தயம்
1தேக்கரண்டி சீரகம்
ஒரு சிட்டிகை பெருங்காயம்,
1/4 கப் கறிவேப்பிலை
1 மேஜை கரண்டி கடலை பருப்பு
4 சிறிய அப்பள தண்டுகள்,
1 மேஜை கரண்டி கத்திரிக்காய் வத்தல்கள்,
1/4 கப் சுண்டைக்காய் வத்தல்கள்
2கார மிளகாய்
½ கப் தக்காளி நறுக்கியது
1/2தேக்கரண்டி மஞ்சள் பொ டி
¼ கப் வேக வைத்த துவரம் பருப்பு
1தேக்கரண்டி புளி பேஸ்ட்
1 மேஜைகரண்டி மசாலா பொடி
தேவையான அளவு உப்பு
செய்முறை:
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.மசாலா பொடி : ப்ரபோர்ஷன் (Proportion) கவனத்தில் வைத்துகொண்டு அதிகமாகவோ அல்லது குறைவான அளவு பொடி செய்க. குறைந்த நெருப்பின் மேல் ஒரு ஸ்கில்லேட்டில் நல்லெண்ணை சூடானதும் கடலை பருப்பு சேர்த்து கிளற, 2--3 நிமிடங்கள்;; நிறம் மாறும் சிறிது பொன் சிவப்பாகும். உளுந்து சேர்த்து கிளற, 2--3 நிமிடங்கள்; மிளகு, வெந்தயம், சீரகம், தனியா ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளற. தனியா நிறம் மாறி நல்ல வாசனை வரும். மிளகாய், அரிசி, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துகிளற. அரிசி குழம்பை கெட்டியாக்கும். மிளகாய் காந்த கூடாது. மிளகாய் காந்த கூடாது. வீடு முழுதும் வாசனை தூக்கும். அடுப்பை அணைக்க.ஆரினதும் பிளென்டரில் முதலில் மிளகாயை பொடிசெய்க, பின் மீதி வறுத்த பொருட்களை மிக்ஸியில் பொடிசெய்க. எல்லவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள், உப்பு சேர்க்க. காற்று புகாத (air tight container) ஜாரில் வாரகணக்கில் சேமித்து வைக்கலாம். வத்தல் குழம்பு செய்யும் பொழுது, 6 கப் குழம்பிர்க்கு 2 மேஜை கரண்டி பொடி சேர்க்க. முடியும் தருவாயில் பொடி சேர்த்து 2 கொதி வந்ததும் அடுப்பை அணைக்க வறுத்த வத்தல்களை சேர்க்க. நான் சுண்டைக்காய் குழம்பு செய்தேன். குழம்பு செய்ய: மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ் பெனில் 1 மேஜைகரண்டி எண்ணை சூடு செய்க. வத்தல்கள், அப்பள தூண்டுகள் வறுக்க. 2 நிமிடம். அடுப்பை அணைக்க. மிக்ஸியில் தக்காளிஉடன் 2 கப் நீர் சேர்த்து புரீ.மிதமான நெருப்பின் மேல் அடிகனமான சாஸ்பெனில் எண்ணை சேர்க்க. தாளிக்க. கடுகு பொறிக்க. சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, கடலை பருப்பு, கார மிளகாய் சேர்க்க. 2-3 நிமிடங்களில் நல்ல வாசனை வரும். மஞ்சள், தக்காளி புரீ 5 கப் நீர் சேர்க்க. 5-6 நிமிடங்களில் கொதிக்கும்,. புளி பேஸ்ட்டை 1 கப் நீரில் கரைத்து இதில் சேர்த்து கிளறவும், வேக வைத்த துவரம் பருப்பை சேர்க்க, மசாலா பொடி சேர்த்து கிளற. குழம்பை கெட்டியாக்க, கடலை மாவை ஒரு கப் நேரில் கலந்து குழம்போடு கிளறவும், கொதிக்கட்டும். 4 நிமிடங்கள் கொதித்த பின் வறுத்த வத்தல்கள், அப்பள துன்டுகள் சேர்க்க. நெருப்பை குறைக்க. மேலு 2 நிமிடம் அடுப்பின் மேல். பின் அடுப்பை அணைக்க. கடையில் வாங்கும் வத்தல்களில் அதிக உப்பு சேர்க்கிறார்கள். அதனால் முதலில் ருசிக்க. ருசித்த பின் தேவையருந்தால் உப்பு சேர்க்க. வீடு முழுவதும் கம கமவென்று வாசனை வரும். வத்தல் குழம்பு தயார், சுவைக்க, சோறோடு சுட்ட அப்பளத்தோடு பறிமாறவும்.