Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பரங்கிக்காய் ஊறுகாய்

தேவையானவை:

விதை நீக்கி தோலுடன் நறுக்கிய கும்மடிக்காய் - 1 கப்,

முழு வெந்தயம் - ½ டீஸ்பூன்,

மிளகாய் பொடி, உப்பு - தலா 50 கிராம்,

கடுகுப் பொடி - 25 கிராம்,

பெருங்காய பொடி - 20 கிராம்,

நல்லெண்ணெய் - 150 கிராம்.

செய்முறை:

உப்பு, முழு வெந்தயம், கடுகுதூள், காரப்பொடி, பெருங்காயப்பொடியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு தோசை மிளகாய் பொடி போல் இறக்கமாக கலக்கி ஒரு கிண்ணம் அல்லது கண்ணாடி, பீங்கான் பாத்திரத்தில் போட்டு மேலே வெள்ளை துணியால் இறுகக் கட்டி வெயிலில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். நறுக்கிய கும்மடிக்காய் துண்டுகளை ஈரமின்றி நன்கு துடைத்து வெயிலில் 2 மணி நேரம் வைத்து நன்கு ஆறவிடவும். எண்ணெய் கலந்த மசாலா நன்கு ஆறியபின் காய் கலந்து நன்கு கிளறி, மறுநாள் உபயோகிக்கவும். ஃபிரிட்ஜில் வைத்து பரிமாறினால் 15 நாட்கள் இருக்கும். வெள்ளை சாதத்துடன் நெய் விட்டு கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.