தேவையானவை :
வேர்க்கடலை - அரை கப்,
கிரீம் பிஸ்கெட் - 4,
உருகிய டார்க் சாக்லேட் - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். பிறகு கிரீம் பிஸ்கெட்டை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அதனுடன் வறுத்த வேர்க்கடலையை போட்டு அரைக்கவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 4 டீஸ்பூன் உருகிய சாக்லேட்டை சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடிக்கவும். பிடித்த உருண்டைகளை ஃபிரிட்ஜில் 1 மணிநேரம் வைக்கவும். இந்த உருண்டைகளை உருகிய டார்க் சாக்லேட்டில் நன்றாக நனைத்து ஒரு தட்டில் வைத்து, மீண்டும் ஒரு மணிநேரம் ஃபிரிட்ஜில் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.