தேவையான பொருட்கள்
2 கப் பாஸ்டா நூடுல்ஸ், ஆர்கானிக் கோதுமை
½ கப் எண்ணை (olive oil preferably)
1 கப் வெங்காயம், மெல்லிசாக நறுக்கியது
2கப் காளான் குடைகள், வெட்டியது
2பச்சை மிளகாய், துண்டாக்கியது
1அங்குலம் இஞ்சி, தோலுரித்து நறுக்கியது
2 கப் தக்காளி மெல்லிசாக நறுக்கியது
4பல் பூண்டு, நசுக்கியது (ஆப்ஷனல்
6கப் மஷ்ரூம் ஸ்டாக் அல்லது வெஜிடபுள் ஸ்டாக்
1கப் பார்மேஸன் சீஸ், துருவியது
1 மேஜை கரண்டி ஆறிகனோ(ஃபிரெஷ் அல்லது உலர்ந்தது)
1 மேஜை கரண்டி பேசில்(basil), (ஃபிரெஷ் அல்லது உலர்ந்தது
1 மேஜை கரண்டி பார்சலி(ஃபிரெஷ் அல்லது உலர்ந்தது
1 மேஜை கரண்டி கொத்தமல்லி
தேவையானஉப்பு
1 மேஜை கரண்டி மிளகு பொடி
செய்முறை:
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.காளான்களின் தண்டுகளை நீக்கி, நன்றாக சுத்தம் செய்க. சிறிய தூண்டுகளாக்க. தண்டுகளையும் சுத்தம் செய்து ஸ்டாக் செய்ய உபயோகப்படுத்துக.ஸ்டாக் செய்ய: அடுப்பின் மேல் ஒரு பாத்திரத்தில் 6 கப் நீர் கொதிக்க வைக்க. கொதித்த பின் தண்டுகளை அதில் போடுக, கொதிக்கட்டும். அடுப்பை அணைக்க, வலை கூடையை ஒரு போலி மேல் வைத்து இதை வடிக்க. வடித்த நீர் காளான் ஸ்டாக்.குக்கர் ஆன் செய்க. எண்ணை சேர்க்க. சூடான எண்ணையில் பச்சை மிளகாய், வெங்காயம், வதக்க, வெங்காயம் பிரவுன் ஆகட்டும். காளான், இஞ்சி சேர்த்து வதக்க—5 நிமிடங்கள். தக்காளி, பூண்டு சேர்த்து வதக்க. காளான் ஸ்டாக் சேர்க்க. மூடுக. 2 கப் நீர் சேர்க்க. மூடுக. கொதிக்க வைக்க..பின் நூடுல்ஸ் போடுக. அப்போ அப்போ கிளறி வேகவைக்க. குழைய வைக்க வேண்டாம். El dente ஆக இருக்க வேண்டும். சீஸ் சேர்க்க. மூடுக சீஸ் உருகிய பின் எல்லாம் நன்றாக சேர்ந்த பின் உலர்ந்த ஆறிகனோ(oregano), பேசில்(basil), பார்ஸ்லி, சேர்த்து கிளற. உப்பு சேர்க்க மிளகு பொடி தூவுக. குக்கர் ஆவ் செய்க. சுவைத்து பரிமாறுக.பாஸ்டா ரெடி.