தேவையான பொருட்கள் : பரங்கி விதை - 100 கிராம் பிளக்ஸ் விதை - 50 கிராம் வால் நட் - 10 சியா விதை - 4 டேபிள் ஸ்பூன் சூரியகாந்தி விதை - 3 டேபிள் ஸ்பூன் பிஸ்தா - 50 கிராம் பேரீச்சை - 10 நெய் - 2 டேபிள்...
தேவையான பொருட்கள் :
பரங்கி விதை - 100 கிராம்
பிளக்ஸ் விதை - 50 கிராம்
வால் நட் - 10
சியா விதை - 4 டேபிள் ஸ்பூன்
சூரியகாந்தி விதை - 3 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா - 50 கிராம்
பேரீச்சை - 10
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
டார்க் சாக்லேட் - 1 (பெரியது)
செய்முறை :
பரங்கி விதை, பிளக்ஸ் விதை, வால் நட், சியா விதை, சூரியகாந்தி விதை, பிஸ்தா ஆகியவற்றை நெய் ஊற்றி வாணலியில் சூடாகும் வரை வறுக்க வேண்டும். ஆறிய பிறகு மிக்ஸியில் கொரகொரவென்று அரைக்கவும். பின்பு பேரீச்சையை சேர்த்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் பட்டர் பேப்பர் அரைத்ததை போட்டு சமன்படுத்தவும். டார்க் சாக்லேட்டை உருக்கி அதன் மீது ஊற்றவும். விருப்பப்பட்டால் அதன்மீது நட்ஸ் தூவிவிடலாம். ஆறியதும் நீளமாக வெட்டி பரிமாறலாம்.