தேவையானவை:
பனீர் - சிறியதாக நறுக்கப்பட்ட துண்டுகள் - 1 கப், வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
பட்டைத்தூள் - சிறிதளவு,
சீரகம் - ஒரு சிட்டிகை,
நறுக்கிய பூண்டு பற்கள் - 3,
உப்பு - தேவையான அளவு,
கார்ன்ஃப்ளர் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் சீரகம், பூண்டு பற்களை சேர்க்கவும். பூண்டு வதங்கியதும் பனீர்த் துண்டுகளைச் சேர்க்கவும். பனீர் லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும். 3 கப் தண்ணீர் சேர்க்கவும். கொதிக்கத் தொடங்கியதும் உப்பு, தண்ணீரில் கரைத்த கார்ன்ஃப்ளர், பட்டைத்தூளை சேர்க்கவும். கொஞ்சம் கெட்டியானதும், இறக்கி சூப் கிண்ணத்தில் ஊற்றி பரிமாறவும்.


