தேவையான பொருட்கள்
1/2 கப் பன்னீர்
1/4 கப் அரிசி மாவு
1/2 lit பால்
4-5 டேபிள்ஸ்பூன் சக்கரை
4-5- குங்குமப்பூ,
1/4 -டீஸ்பூன் ஏலக்காய் தூள்
செய்முறை
முதலில் ஒரு பவுலில் அரிசி மாவு + பன்னீரை துருவி சேர்த்து நன்கு கைய்யால் கலந்துக்கவும்.அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமா தண்ணி தெளித்து பூரி மாவு பததுக்கு நன்கு பிசைந்து எல்லாவற்றையும் சிறு கொழுக்கட்டையாக உருட்டி வைத்துக்கவும். ஸ்டவ்வில் அடிக்கனமான பாத்திரம் வைத்து பால் விட்டு நன்கு கொதிக்க விடவும், நன்கு கொதிக்கும் பாலில் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டைகளை சேர்த்து மிதமான சூட்டில் வேக விடவும்.அத்துடன் குங்குமபூ சேர்த்து வேக விடவும். நன்கு வெந்ததும் கொழுக்கட்டைகள் மேல் எழும்பி வந்துடும்.அப்பொழுது சக்கரை சேர்த்து நன்கு கொதித்து பால் சுண்டி கெட்டியானதும் ஏலக்காய் தூள் சேர்த்து ஸ்டாவ்வ் ஆப் செய்துவிடவும். அருமையான நிறத்துடன் குங்குமப்பூ வாசத்துடன், சுவையான பன்னீர் பால் கொழுக்கட்டை தயார்..வேறொரு பாத்திரத்துக்கு மாத்தி குங்குமப்பூ மேல் தூவி அலங்கரித்து பரிமாறவும். தேவையெனில் முந்திரி, திராக்ஷை நெய்யில் வறுத்து போட்டும் சாப்பிடலாம்... சூடாகவும் சாப்பிடலாம், பிரிட்ஜில் குளிர வைத்து ஜில்லுன்னும் சாப்பிடலாம்... மிக மிக சுவையாக இருக்கும்...