தேவையானவை:
பனீர் - 1/2 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
தேங்காய் பால் - 1 கப்
தேன் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - சிறிது
செய்முறை:
பனீர் சிறிது வெதுவெதுப்பாக வதக்கி, மென்மையாக அரைக்கவும்.இதனுடன் தேங்காய்ப்பால், தேன், ஏலக்காய் தூள் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். ஃபிரீசரில் வைத்து 4 மணி நேரம் கழித்து பரிமாறலாம்.